எல்லாரும் வலிமை அப்டேட் கேட்டு இருக்காங்க…! ஆனா தல தங்கப் பதக்கத்தை வாங்கிட்டு இருக்காரு..! என்ன நடக்குதுனு தெரியல..! குழப்பத்தில் ரசிகர்கள்..!

Cinema News

நம்ம தல அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற அறிவு சார்ந்த தொழில் நுட்பத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு  அந்த போட்டியில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், தற்போது வலிமை படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டதையடுத்து, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

uma