இணையத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையாடா என்று கேள்வி கேட்கும் விதமாக இருக்கிறது. நீங்களே அந்த வீடியோவை பார்த்தால் அப்படி தான் கேள்வி கேட்ப்பீர்கள்.
தமிழ் நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தல அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் மாஸ்டர் படத்தின் ரீலீஸ் மற்றும் அடுத்த படத்தின் தகவல் கூட வெளியாகி விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்து உள்ளது. இந்நிலையில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. அஜித்தின் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் இப்படத்தை குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து பெரிதாக அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதனால் ரசிகர்கள் பலரும் கவலையில், சமூக வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் அப்டேட் கொடுங்க என்று கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சாரத்திற்கு சென்று இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தல அஜித் ரசிகர்கள் பலரும் வலிமை படத்தின் அப்டேட் இருந்த சொல்லுங்க என்று கேட்டுள்ளனர்.
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ!
#Valimai Update 😂😂
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் update கேட்ட தல ரசிகர்கள் pic.twitter.com/tArT59MYr6
— AJITH KUMAR FANS CLUB (@Fans_of_thala) January 1, 2021