மணமகள் கைரம் பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்! ”என் வாழ்நாளில் மறக்க முடியாது”மணப்பெண் நெகிழ்ச்சி!

Tamil News

நீயா நானா நிகழ்ச்சியில் சொன்ன ஹெலிகாப்டரில்   என்ட்ரி இப்போ நிஜமானது கர்நாடகா மாநிலத்தில் மணமகன் திருமணமத்திற்கு ஹெலிகாப்டரில்  வந்த இறங்கி உள்ளார். இந்த நிகழ்வை ஆச்சியரியமாக ஊர்மக்கள் பார்த்துள்ளனர்.

கார்நாடக மாநிலத்தில் அமைந்துள்ல துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  பலராம் மற்றும் ரமாதேவி தம்பதியினர். இவர்களுக்கு, மகன் நிரூப் என்ற மகன் உள்ளார். இவர்கள் சொந்தமாக அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது மகனுக்கு பெண் பார்த்து உள்ளார்கள்.  பெங்களூரு தலகட்டபுரா அருகே வசிக்கும் கிஷோர், மாதவி தம்பதியின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களது திருமணம் டிசம்பர் 1-ந் தேதி என்று முடிவு செய்தார்கள். இருவீட்டாரும் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாகவும் வித்தியசமாகவும் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்துள்ளார்கள். அதனால் ஹெலிகாப்டரில் மகன் வரவேண்டும் என்று மணமகன் பெற்றோர்கள் நினைத்தார்கள். இதனால் குடும்பத்தினருடன் தலகட்டபுராவில் உள்ள திருமண மண்டபத்திற்கு பறந்து வந்துள்ளார் இதைக்காண, ஏராளமான பொதுமக்கள் மண்டபத்தின் முன்பாக திரண்டு இருந்தார்கள்.

துமகூருவில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகனுக்கு,  மணமகள் வீட்டார்  உற்சாக வரவேற்பு அளித்து மண்டபத்திற்குள் அழைத்து சென்றனர். பின்னர் இருவரின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைப்பெற்றது.  இதுகுறித்து மணமகன் பேசுகையில், ‘எனது திருமணம் புதுவிதமாக இருக்க வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினார்கள். இந்த நிகழ்வு  மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. எங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை என் வாழ்நாளில் மறக்க முடியாது,’ என தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *