மாஸ்டர் படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது விஜய் படப்பிடிப்பு தளத்தில் எப்படி இருப்பார் என்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் தான் மாஸ்டர். இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் கூறுகின்றனர். ஆனால் அதுவும் இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதனால் படக்குழுவினர் படத்தின் டீஸர், பாடல்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அப்படி வெளியான புகைப்படங்களில் மாஸ்டர் படத்தின் மேக்கிங் புகைப்படத்தில் விஜய் அவர்கள் மிகவும் சிம்பளாக அமர்ந்த படி இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த புகைப்படம் உங்களுக்காக!
OMG, Evlo simple a irukkar intha manushan 😳😳😳😳@actorvijay you deserve all the fans and fame you have in life. You have earned it #Master #MasterOnlyOnTheaters pic.twitter.com/MG21AJvnVe
— 👻👻 (@GayuTweetz) November 30, 2020