லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளுடன் நடிகை மீனா எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ!
தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி போன்ற இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்த தமிழ் நடிகை ஸ்ரீதேவி அவர்கள். இவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
நடிகை ஸ்ரீதேவியின் ஆசைப்படி பாலிவுட்டில் அவரது முதல் மகள் ஜான்வி படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது படம் மட்டுமின்றி அதிக விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கிறார். நடுவில் அவர் புதிது புதிதாக கற்றுக்கொள்ளும் நடன அமைப்புகள் பற்றிய வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
சில நேரங்களில் தமிழ் பெண் போன்று புடவை கட்டுவதும் அதனை இணையத்தில் பதிவு செய்வது என்று இருப்பார். இதனை பார்த்த இணைய வாசிகள் இவர் எப்போது தென்னிந்திய சினிமா பக்கம் வருவார் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஸ்ரீதேவி மகளுடன் நடிகை மீனாவும் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ!