த்ரிஷாவுக்கும் சிம்புவிற்கும் மலர்ந்த காதல்! 2021ல் திருமணம் உறுதி!ஷாக் மேல ஷாக் கொடுக்கும் டி. ராஜேந்தர்!

Cinema News

மீண்டும் சிம்புவின் திருமணம் குறித்து இணையத்தில் வைரலாகும் செய்தி. சிம்புவின் வருங்கால மனைவி த்ரிஷாவா? 2021ல் திருமணம் உறுதியா வாங்க பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்து இப்போது வரைக்கும் தனக்காக ஒரு இடத்தை வைத்து இருபவர் சிம்பு. சிம்புவிற்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருகின்றது. அதே போல் கடந்து பத்து வருடங்களாக முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா ரசிகர்களை தன் வசம் வைத்து இருப்பவர் தான். இருவருமே அலை என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அந்த படம் சரியாக போகவில்லை.

கௌதம் மேனன் படத்தில் ’விண்ணை தாண்டி வருவாயா’ இருவரும் ஜோடிகாக நடித்தார்கள். இந்த படம் மிகவும் பிரபலமானது. இருவருக்கும் இருக்கும் நெருக்கம் அனைவரும் கொண்டாட தொடங்கினார்கள். இந்த திரைப்படத்தின் போது த்ரிஷா உடன் காதல் என்று பல கிசுகிசுகள் பேசப்பட்டது. ஆனால் அது அப்போது இருவருமே இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து நடிகை சிம்பு உடன் நயன்தாரா, ஹன்சிகா தொடர்ந்து கிசுகிசுகள் பேசப்பட்டது. இவர்களுடன் திருமணம் நடக்கும் என்று பலர் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் யாருடனும் திருமணம் நடைபெறவில்லை. இதான் மீண்டும் சிம்புவின் திருமணம் கேள்வி குறியானது.

சமீபத்தில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்திரரிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. டி. ராஜேந்திரரிடம் சிம்புவுக்கு வரன் பார்க்க துவங்கிவிடீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த டி. ராஜேந்தர் அவர்கள் சிம்புக்கு நிறைய பெண் பார்த்துவிட்டேன், இனிமேல் அந்த ஈஸ்வரன் தான் சிம்புவுக்கு நல்ல வரன் தரவேண்டும் என்று பதில் அளித்து அப்படி நடந்தால் 2021 நல்லது நடக்கும் ” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் மீண்டும் சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் தான் கல்யாணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *