கற்றாழையை கூட இத சேர்த்து பாருங்க! ஒரே இரவில் உங்கள் முகம் ஜொலிக்கும்!

Health News

அழகு என்றால் பெண். பெண் என்றால் அழகு பெண்களை மையபடுத்தி பல கெமிக்கல் பொருட்கள் மார்க்கெட்டில் வியாபாரம் நடக்கிறது. ஆனால் இயற்கையில் உள்ள அழக பொருட்களை நம்ம மறந்து விடுகிறோம். அந்த வகையை சார்ந்த கற்றாழை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் பார்க்க போகிறோம்.

சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது என்றால் அது சோற்றுக் கற்றாழை தாங்க. இது உடலில் ஏற்படும் சுருக்கம், முகப்பரு, இன்னும் பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாகும். ஆனால் கற்றாழையை அப்படியே நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல. அது சரும எரிச்சல் உண்டாகி விடும். அதனால் அதனுடன் சில பொருட்களை கலந்து உபயோகிக்கும்போது கற்றாழையின் முழுப்பலன் கிடைக்கும். மேலும், உங்கள் அழகும் அதிகரிக்கும்.

மணக்கும் மஞ்சள்:

குறிப்பு : அதிக எண்ணெய் மற்றும் முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு இதனை பயன்படுத்தலாம்.

கற்றாழையுடன் சிறிதுளவு மஞ்சள் குழைத்து முகத்திற்கு போட்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.  இப்படி செய்தால் எண்ணெய் வழியாது. முகப்பருக்களின் தீவிரம் குறைந்து சருமம் பொலிவடையும

குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்:

குறிப்பு: சுருக்கம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.

கற்றாழையுடன் சிறிது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் 3 முறை செய்தால் நுண்ணிய சுருக்கங்களும் காணாமல் போய்விடும்.

அரிசி மாவு:

குறிப்பு: முகம் மரும் கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை அகற்ற இந்த குறிப்பு மிகவும் சிறந்தது.

அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் கற்றாழையை கலந்து முகம் கழுத்தில் மென்மையாக தேய்க்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெண்மையான பால்:

குறிப்பு: வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு!

பாலில் சிறிது கற்றாழை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மென்மையாகும். மினுமினுப்பை தரும். ஈரப்பதம் அளிக்குமாம். இதனையும் நிங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

uma