விஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது! நடிகை சங்கவி எடுத்த முடிவுக்கு இதுதான் காரணமா?

Cinema News

இளைய தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் இந்த இடத்தை தொட பல தடைகளை தாண்டி தான் வந்துள்ளார்.

அந்த வகையில் விஜய்யின் 90களிலும் ஆரம்ப காலத்தில் அவருடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சங்கவி.

இவர் மீண்டும் கொளஞ்சி என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார், மேலும், அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களின் பேவரட் ஜோடியாக இவர்கள் இருந்தார்கள்.

அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்ததாக கூறியுள்ளனர். இதுபற்றி சங்கவி மறுத்துள்ளார். அப்படியாக நாங்கள் பழகவில்லை நல்ல மனிதர் விஜய் என்று கூறி இருந்தார். அதன்பின் மாஸ் படங்களில் நடித்ததால் சங்கவியுடன் நடிக்க மறுத்துள்ளார் விஜய்.

இதையடுத்து 2016ல் திருமணம் செட்ய்து வாழ்ந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் படங்களில் நடிக்காமல் இருந்ததை பற்றி பேட்டியில் கூறியுள்ளார்.

அதில், ஆரம்ப காலத்தில் தொடர்ந்து விஜய் திரைப்படங்களில் அவருக்கு இணையாக நிறைய படங்களில் நடித்து வந்தேன். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக அப்போதைய செய்திகள் தெரிவித்து எங்கள் இருவரை பற்றி கிசுகிசு வராத நாளே இல்லை.

இன்னும் ஒரு படி மேலே சென்று, சிலர் இருவரும் காதலிப்பதாகவும் கூறினர். ஆனால், இதுகுறித்து சங்கவி நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதுபோன்ற செய்திகள் தொடர்ச்சியாக வருவதால் நான் விஜய் படங்களில் நடிப்பதை என்னுடைய நண்பர்களும், சில தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. மேலும், விஜய்யின் பெயரும் சேர்ந்தே இந்த விஷயத்தில் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இதனால், இருவரின் நலன் கருதியும் இனி விஜயுடன் சேர்ந்து நடிக்க கூடாது என முடிவு செய்ததாக சங்கவி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *