பிரபல நடிகையாக இருப்பதாலேயே தனது சுதந்திரம் பல வகையில் பாதிக்கப்படுவதாக கருதியுள்ள நடிகை சமந்தா, சமீபகாலமாக தனது நெருங்கிய உறவுகளுக்கும் ஒரு புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது தனக்கு யார் போன் செய்தாலும், அதற்கு முன்னதாக அவர்களது பெயரை முதலில் மெசேஜ் அனுப்பிவிட வேண்டுமாம். அதன்பிறகே அவர் அவர்களது அழைப்பை எடுப்பாராம்.. அல்லது அவரே அவர்களை திரும்பி அழைப்பாராம்.
சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாலும், உணவு டெலிவரி செய்ய வரும் நபர்களாலும் எப்படியோ தனது மொபைல் நம்பர் சில பேருக்கு தெரிந்து விடுவதால், அடிக்கடி புது எண்களில் இருந்து முகம் தெரியாதவர்கள் அழைத்து டா ர் ச் சர் செய்வதாகவும், இதனால் பல கச ப் பான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.
அழைப்பது தனக்கு வேண்டிய நபரா, இல்லையா என்கிற குழ ப் பம் சமந்தாவுக்கு ஏற்படுகிறதாம். முக்கியமான அழைப்பாக இருக்குமோ என நினைத்து அப்படிப்பட்ட அழைப்புகளை அட்டென்ட் செய்து பேசியபோது ஏற்பட்ட க ச ப் பான அனுபவத்தை தொடர்ந்து தான் இந்த முடிவுக்கு வந்தாராம் சமந்தா.
இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார்.