இப்பதானே ரெண்டா தெரிஞ்சிச்சு..!!! அதுக்குள்ளே மூனா தெரியுது..!!! அட இரண்டு பேர் இல்லையா..?? மூன்று பேரா..?? டாக்டர் படத்தில் நடித்த இரட்டை சகோதரர்களை நிஜத்தில் பார்த்ததுண்டா..?? மூன்று பேராக ஆச்சர்யத்தை கொடுத்த போட்டோ..!!

Cinema News

அடுத்து விஜயின் படமான பீஸ்ட் படத்தினை இயக்கி வரும் இயக்குனர் நெல்சனின் டாக்டர் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. விஜயின் மாஸ்டர் படத்திற்கு பின்னர் இந்த படம் தான் அதிகமாக முதல் நாள் வசூல் செய்த படமாக இருந்தது டாக்டர் படம். மிக நீந்த நாள் க ழித்து அனைவரிடமும் நல்ல விமர்சனம் பெற்ற ஒரு படமான இருந்தது.


இந்த படத்தில் பலருமே ஆச்சர்யபட வைத்தது கதாபாத்திர தேர்வுகள் தான். எப்போதுமே ஏதேனும் வசனங்கள் பேசி கொண்டே இருக்கும் சிவகார்த்திகேயனை எந்த ஒரு எமோசனும் காட்டாத ஒரு டாக்டராக நடிக்க வைத்தது, மேலும் பெரிய ஒரு படத்தில் புதுமுக ஹீரோயின் என்று பக்கவாக பொருந்தி இருந்தன. மேலும் பலராலுமே பேசப்பட்டது இந்த படத்தில் வந்த அந்த வில்லன் அணியின் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரங்கள்.


இதற்காகவே ஒரு நிஜ வாழ்க்கை இரட்டையர்களை தேடி சென்று நடிக்க வைத்து இருக்கின்றார் நெல்சன். இவர்கள் ராஜீவ் லக்ஷ்மன் மற்றும் ரகுராம் ஆவார். இவர்கள் இருவரும் டாக்டர் படம் குறித்து பேட்டி ஒன்று கூட அளித்திருந்தார்கள். அதில் அவர்கள் கூறியது, டாக்டர் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த படத்தில் ஒரு ஸ்டன்ட்காட்சியில் நிஜமாகவே நாங்கள் சிவகார்த்திகேயனை .அ.டி.த்.து. .வி.ட்.டோ.ம்.


ஆனால், அவர் கொஞ்சம் கூட எதுமே சொல்லவில்லை இதெல்லாம் ரொம்ப சாதரணமாக எடுத்து கொண்டு சென்றுவிட்டார். வெளியில் அவர் எப்படியே அதே போல எல்லா இடத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு நல்ல மனிதர். கமலஹாசன், ரஜினிகாந்த் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவருமே மிகப்பெரிய ரசிகர்கள். அதேபோல் விஜய் உடைய நடனம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று தமிழ் சினிமாவினை பற்றியும் பகிர்ந்து கொண்டு இருந்தார்கள்.


இவர்கள் முதன் முதலில் சினிமாவில் நுழைந்தது ஹிந்தி சினிமா மூலமாக தான். அடுத்து அடுத்து பஞ்சாபி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இப்போது தான் முதன் முறையாக தமிழில் டாக்டர் படத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார்கள்.


இந்த போட்டோவில் தான் பலருமே ஷாக்காகும் அளவிற்கு ஒரு விஷயத்தினை வைத்திருக்கிறார். என்ன அந்த புகைப்படத்தில் உள்ளது என்றால், அந்த புகைப்படத்தில் மொத்தம் 3 சகோதரர்கள் ஒரே போல உள்ளார்கள். இதை பார்த்தால் இவர்கள் ட்வின்ஸ்? மூவரா? என்று கேட்டுள்ளனர். உண்மையாலுமே இவர்கள்ட்வின்ஸ் தான். புகைப்படத்தில் நடுவில் இருப்பவர் இந்தப்படத்தின் மெட்ரோ காட்சியில் எடுக்கப்பட்ட ஸ்டன்ட்காட்சிகளில் போது இவர்களுக்கு டூப் போட்டவர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை தான் இவர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்கள்.