“நாங்களும் புதுசா இறக்குவோம்-ல…!!” புத்தம் புது சீரியலை களத்தில் இறக்கும் ஜீ தமிழ்…!! லீ க் கான சூட்டிங் ஸ்பார்ட் போட்டோஸ்…!!

Cinema News

வெள்ளி திரைக்கு இணையாக ரசிகர்களை கொண்டது சின்னத்திரை. அதிலும் சீரியல்கள் தான் எப்பொழுதும் முதலிடம். அந்த வகையில் தற்போது முன்னனி தொலைக்காட்சியாக இருக்கும் ஜீ தமிழ் டிவியில் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீரியல்கள் மூலமாகவே TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பல டிவி சேனல்கள் பெற்று வருகின்றனர். அதாவது இல்லத்தரசிகளை குறிக்கோளாக வைத்து அவர்களை கவரும் வகையில் பல புது புது கதைகளை கொண்ட சீரியல்களை தங்களின் சேனல்களில் ஒளிபரப்பி வருகின்றன.

மேலும் ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புது புது சீரியல்களையும் தங்களின் சேனலில் அறிமுகப்படுத்தி, மக்களை தங்களின் சேனல்  விட்டு நகராத வண்ணம் வைத்து வருகின்றனர்.அந்த வகையில் டாப் சேனலாக இருக்கும் விஜய் டிவி சமீபத்தில் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியலை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.

அதே டாப் நிலையில் இருக்கும் அடுத்த சேனல் ஜீ தமிழ் இந்த டிவியும் தற்போது ஒரு புதிய சீரியலை களம்  இறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் ஒரு புதிய சீரியல் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன. மேலும் அந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.