பிரபல ஜோடிகள் விவாவகரத்து பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த அதிசியம்..! யார் அந்த ஜோடிகள் தெரியுமா?

Cinema News

தமிழ் சினிமாவில் பல நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே தற்போது வரையும் சேர்ந்து வாழ்கிறார்கள். பலர் பிரிந்து செல்கிறார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகர்கள் திருமணம் செய்து கொண்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த அதிசியம் நிகழ்ந்துள்ளது.

சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிவது காணக்கூடியதுதான். அந்தவகையில், பிரபல நட்சத்திர ஜோடிகளாக இருந்தவர்கள் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன்.

இவர்கள் இருவருமே 1999ல் நேசம் புதுசு படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தபோது காதல் ஏற்பட்டுள்ளது. காதல் திருமணம் வரை செல்ல குடும்பத்தினர் சம்மதத்துடன் நட்சத்திர ஜோடிகளானார்கள். இதையடுத்து இரு குழந்தைகளை பெற்றபின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின் ரஞ்சித் ராகசுதா என்பவரை திருமணம் செய்து ஒரே வருடத்தில் அவரையும் பிரிந்தார். பல வருடங்களாக தனிமையில் இருந்த நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் சீரியலிலும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தங்கள் திருமண நாளை முன்னிட்டு ரஞ்சித்-பிரியா ராமன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர். இதை கொண்டாடும் வண்ணம் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஞ்சித்.

இதோ அந்த புகைப்படம்..!

 

View this post on Instagram

 

A post shared by ACTOR RANJITH (@actorranjith)

uma