அய்யோ..! பைக் வருது ஓரமா போங்க..! நானும் தளபதி ரசிகை தான்..! கொஞ்சம் வழி விடுங்க..! டிடியின் விநோதமான வீடியோயை நீங்களே பாருங்க..!

Cinema News

விஜய் தொலைக்காட்சியில் செல்ல பிள்ளையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நம்ம திவ்ய தர்ஷினி என்ற டிடி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த நபர்.

சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என எப்போதும் தன்னை பிசியாக வைத்துக் கொள்பவர் நடிகை திவ்ய தர்ஷினி. இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சி என்பதே இல்லை. அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவர்.

நடிகை டிடி அவர்கள் நடிகர், நடிகைகளை இன்டர்வியூ எடுப்பது போன்ற நிகழ்ச்சிகளையும் காமெடியுடன் தொகுத்து வழங்குவார். இவரது நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டி இருக்கும் டிடி அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு அருகில் சைக்கிளிங் செய்துள்ளார். கியர் இல்லாத பழைய சைக்கிளில் தான் ரைட் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

எதிரில் வரும் ஒரு பைக்கை ஓரமாக போக சொல்லி கெஞ்சுகிறார். தூரமாக பைக் வந்தாலும் போட்டேன் பாருங்க பிரேக்க என்று நகைச்சுவையுடன் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். தான் தளபதி ரசிகை என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதோ அந்த வீடியோ..!

uma