தனது திருமணம் குறித்தி முதன் முறையாக சாய் பல்லவி புகைப்படத்தை வெளியிட்டு பதில் கூறியுள்ளார்..! அப்போ விரையில் திருமணம் தானா?

Cinema News

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக தமிழ் பெண்ணாக மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.

சாய் பல்லவி பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பே தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் சாய் பல்லவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் வசூல் சாதனை, யூட்யூப்பில் சாதனை என பல சாதனைகளை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே, கரு உள்ளிட்ட படங்களில் நடித்தார் சாய் பல்லவி. இதனையடுத்து, நெட்ஃப்ளிக்சில் வெளியிடப்பட்ட வெற்றிமாறனின் பாவ கதைகள் படத்தில், கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது.

தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தற்போது சாய் பல்லவி, தனது சொந்த ஊரான நீலகிரி மலையில் உறவினரின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.

அங்கு தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட ஜாலி ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சாய் பல்லவி.

மதுவே ஸ்குவாட் என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். சாய் பல்லவியின் தாய் மொழியான படுகர் மொழியில் இந்த வார்த்தைக்கு, திருமணமும் அதன் பட்டாளமும் என அர்த்தமாம். சாய் பல்லவியின் இந்த ஃபோட்டோக்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனால், இந்த பதிவினை பார்த்த ரசிகர்கல் விரையில் சாய் பல்லவி திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..!

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

uma