பிரபல நடிகைக்கு திருட்டுத்தனமாக தாலிக்கட்டிய சீரியல் நடிகர்..! குழந்தை பிறந்த பிறகு போட்டு உடைத்த உண்மை..!

Cinema News

தமிழ் நாட்டில் சீரியல் பார்க்காத பெண்கள் இருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு வீட்டில் அனைவருமே சீரியல் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில், தமிழ் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது இதனால் சீரியல்களில் ஹுட்டிங் தடை நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் பேட்டிகளை கொடுத்து நேரத்தினை கழித்து வருகிறார்கள்.

அதனால், சின்னத்திரை ஜோடிகளாக இருந்து லாக்டவுன் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஜோடி ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியலில் நடித்த போது காதல் ஏற்பட்டது. அதன்பின் ஆலியா – சஞ்சீவ் இருவரும் ரியல் ஜோடியாக திருமணம் செய்து தற்போது பெண் குழந்தையும் பெற்றனர்.

இந்நிலையில் ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு ஆலியாவை இழந்து விடக்கூடாது என்பதற்காக சஞ்சீவ் தன்னுடைய பிறந்தாளில் ஆலியாவிற்கு தெரியாமலே கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதையடுத்து ஆலியாவீட்டாரிடம் பெண் கேட்டபோது மறுத்து விட்டனராம்.

அதற்கு காரணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால். பின் இதனால் ஆலியா தன் வீட்டினை விட்டு வெளியே வந்தவுடன் சஞ்சீவ் வீட்டின் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நிக்காஹ் செய்து கொண்டனர்.

இதையடுத்து இந்த தகவல் வெளியில் கசிந்ததும் அனைவருக்கும் தெரியப்படுத்தி திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளனர்.

மிகச்சிறப்பாக இருவருக்கும் திருமணமாகி தற்போது பெண் குழந்தை அய்லாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்

 

uma