நடிகை வாணி போஜனுக்கு திருமணம் நடந்து விட்டதா? ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கனும்..! அதற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் அளித்த நடிகை..!

Cinema News

முன்பு எல்லாம் வெள்ளித்திரையில் இருந்து தான் சின்னத்திரைக்கு செல்வார்கள். அப்படி பல நடிகர் மற்றும் நடிகைகள் சின்னத்திரை நடித்து உள்ளார்கள்.

ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. சின்னத்திரையில் இருந்து சென்று வெள்ளித்திரையில் வெற்றி நாயகர்களாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், சின்னத்திரை சீரியல் மூலம் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகை வாணி போஜன் அவர்கள் தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

நடிகை வாணி போஜன் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அப்போதெல்லாம் ரசிகர்கள் பலரும் வாணிபோஜன் சின்னத்திரை நயன்தாரா என தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமாக இருந்தார்.

இந்நிலையில், வாணி போஜன் கவர்ச்சி இல்லமால் எப்போதும் போல எளிமையாக நடித்து தனது திறமையை வெளிகாட்டி வருகிறார்.மேலும், மலேசியா டு அம்னீசியா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் கதைப்படி திருமணத்திற்கு பிறகும் ஒரு பெண்ணிடம் ரகசிய தொடர்பு வைத்திருப்பார் வைபவ் அதை தெரிந்தும் வாணிபோஜன் மன்னித்து ஏற்றுக்கொள்வார். இவ்வளவு பெருந்தன்மையுடன் இருப்பது சரியா சாத்தியமா என ரசிகர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு வாணி போஜன் குடும்பத்தின் நலன் கருதி பல பெண்கள் தங்களது கணவனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அதிலும் ஒரு சில பெண்கள் துரோகத்தை தாங்க முடியாமல் வெறுத்து விடுகிறார்கள். இதில் குடும்பத்திற்காக ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.

இந்த தகவலால் இவருக்கு திருமணம் செய்து கொள்பவர் மிகவும் கொடுத்து வைத்துள்ளார் என்று கமெண் செய்து வருகிறார்கள்.

uma