ரஜினியின் கையில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரியுமா? இப்போ அவங்க 50 வயது பிரபலம்? நம்பமுடியாத உண்மை..!

Cinema News

தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் ரஜினிகாந்த அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் காளி திரைப்படத்தில் நடித்த சிறிய குழந்தை தற்போது 50 வயதாகியுள்ள பிரபலம் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்தனர். அதில் பலருக்கும் நினைவு வருவது நடிகை மீனா என்பதே. அவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் தற்போது முன்னணி நடிகையாகவும், பிரபலங்களாகவும் இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினியுடன் காளி படத்தில் நடித்துள்ள சிறுமி தற்போது 50 வயதாகும் பிரபல பாடகியான அனுராதா ஸ்ரீராம் என்று தெரியவந்துள்ளது.

இப்படத்தில் அனுராதா ஸ்ரீராமும், சிறுவன் காஜா ஷெரீஃபும் ரஜினியுடன் நடித்துள்ளதாக ரஜினி மக்கள் மன்ற ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இப்புகைப்படமும் தீயாய் பரவி வருகின்றது.

பின்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராம் பம்பாய் திரைப்படத்தில் குரூப் பாடகராக ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்தினார்.  அதன் பின்னர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே பாடல் மூலம் அனுராதா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அனைத்து இசையமைப்பாளர்களின் பாடல்களிலும் பின்னணி பாடகியாக பாடியிருக்கும், அனுராதா தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மூவாயிரத்திற்கும் மேல் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..!

uma