திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா செய்த வேலையை பாருங்க..! படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வைரல் புகைப்படம்..!

Cinema News

தமிழ் சினிமாவில் குடும்ப குத்து விளக்கு நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை சினேகா அவர்கள். இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகை சினேகா மலையாள நடிகையாக அறிமுகமானாலும் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட சில படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இதையடுத்து, சூர்யா, ஸ்ரீகாந்த், பிரசாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். நடிகர் கமல் ஹாசனுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், விஜய்யின் வசீகரா படத்தில் பாப்பு கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய இடத்தினை கொடுத்தது.

இந்நிலையில், கடந்த 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் இடைவெளிவிட்டு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனையடுத்து தனது  உடல் எடையை குறைத்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சக பணியாளர்களுடன் கிரிக்கெட் விளையாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்புகைப்படம் சென்னை 28 படக்குழுவினருடன் எடுத்துகொண்டுள்ளார். அவருடன் கணவர் பிரசன்னாவும் இருந்துள்ளார்.

தற்போது புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு எதற்கு இந்த வேலை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

uma