மாப்பிள்ளை ஊர்வளத்திற்கு ஒத்திகை பார்க்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிகள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

Cinema News

தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள், காதல் ஜோடிகள் பற்றிய தகவல் அவ்வப்போது வந்து போகும். அப்படி அஜித், ஷாலனி, சூர்யா, ஜோதிகா போன்ற பல காதல் கதைகளை பார்த்த தமிழ் சினிமா தற்போது நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பற்றிய காதல் கதை தான் ஓடி கொண்டு இருக்கிறது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று தான் ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இருவருமே தங்களின் திருமணம் குறித்து இதுவரை, எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் இருவரும் வெளியிடவில்லை.

ஆனால் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை அவ்வப்போது இருவரும் இணைந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது யானை மேல் ஏறி சவாரி செய்யும் நெருக்கமான புகைப்பம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு மாப்பிள்ளை ஊர்வளத்திற்கு ஒத்திகை பார்க்கிறார் போல என்று பல கமெண்டுகளை தெறிக்கவிடுகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..!

uma