பல பலனு பப்பாளிப்பழம் போல இருந்த நடிகை சமந்தா தற்போது முருங்காயை போன்று முற்றிலும் மெலிந்துபோன புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Cinema News

தமிழ் சினிமாவில் சிறு கதாப்பத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா அவர்கள். இவர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர்.

நடிகை சமந்தா அவர்களுக்கு திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் பெண்ணாக இருந்து தெலுங்கு தேசத்திற்கு மருமகளாக சென்றதால் நடிகை சமந்தா தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருவதால், அதிகமான தமிழ் திரைப்படங்களில் இவரை காண முடியவில்லை.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து வேறு எந்த திரைப்படங்களிலும் இவர் நடிக்கவில்லை.

மேலும் தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல், உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைதங்களில் எப்போது ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருவது வழக்கம்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஆம், சமந்தா முற்றிலும் மெலிந்துபோன தோற்றதில் காணப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

uma