90களின் முன்னணி நாயகியும் நடிகை ஜோதிகாவின் அக்காவுமான நக்மாவின் திருமணம் தொடர்பாக வெளியான செய்தி..! இந்த வயதில் தேவையா இது என விமர்சிக்கும் ரசிகர்கள்..!!

Cinema News

நடிகை நக்மா..! சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சரத்குமார், கார்திக், ரஜினிகாந்த்,கமலஹாசன், உட்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.அத்துடன் தல அஜித் நடித்த சிட் டிசன் திரையிலும் நடித்தார். சினிமாவில் ஒருவர் வரும் போது இன்னொருவர் ஓரம் கட்டப் படுவது வழமை தானே அதே போல் நக்மாவும் ஓரம் கட்டப் பட்டார்.

பின்பு அரசியலில் நுழைந்த நக்மா இன்று முழு நேர அரசியல் வாதியாக இருகின்றார். சினிமாவில் அக்கா தங்கையர் மூவருமே மக்கள் மனதை வென்றவர்கள்.ரோஷினி மற்றும் ஜோதிகா வாழ்க்கையில் செட்டிலாகிவிட 44 வயதாகிய நக்மா இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். டிசம்பர் 25 1974ம் ஆண்டு பிறந்த நக்மா சினிமாவில் இருக்கும் வரை பலருடன் இணைந்து கிசுகிசுக்கப் பட்டார்.

தெலுங்கு திரைப்பட நடிகரை திருமணம் செய்வார் என எதிர் பார்த்த நிலையில் அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நக்மாவிடம் திருமணம் பற்றி கேட்டதற்கு கண்டிப்பாக என் திருமணம் நடக்கும் அதுவும் இந்த வருடத்திற்குள் என கூறியுள்ளார். அரசியல் துறையை சார்ந்தவரா அல்லது சினிமா துறையா என கேட்டதற்கு..நான் இப்போது அரசியலில் இருக்கிறேன்.

அரசியல் தெரியாதவரை எப்படி திருமணம் செய்து மகிழ்ச்சியாய் வாழ்வது. ? நிச்சயம் அரசியல் துறை தான். என கூறியவரிடம் யார் என்பதை கூற முடியுமா என கேட்டதற்கு, என் கையில் எதுவும் இல்லை காலம் பதில் சொல்லும் இன்னும் சில மாதங்களில் நீங்களே அறிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார். அப்படியானால் 44 வயதில் நக்மா திருமணம் உறுதியாகி உள்ளது.

இதனை பார்த்த சிலர் இந்த வயதில் இது தேவையா என கூறி வருகின்ற போதும் நிச்சயமாக 40 வயதிற்கு பின் பெண்ணுக்கு உறவு வேண்டும்.இளமை வீணாகி போனாலும் முதுமையில் ஆணின் அரவணைப்பு கிடைக்கும் பெண் வரம் பெற்றவள் ஆகிறாள். வாழ்த்துக்கள் நக்மா..!பிரபல நடிகையும் அரசியல் வாதியுமான நடிகை நக்மாவிற்கு திருமணம். எப்போது.? யார் ? இதோ உங்களுக்காக…!