80-ஸ்களின் கனவுக்கன்னிகள் இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? தோழிகளுடன் கும்மாளமிட்ட புகைப்படம் இதோ!

Cinema News

80களில் பெரிய பொட்டு புடவையில் கலக்கிய நடிகைகள் இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா. 80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை நதியா, தன்னுடைய தோழிகளை சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா துறையில் தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நதியா. பிரபல நடிகர்களுடன் நடித்த இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

நதியா அவர்கள் தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இதனையடுத்து திருமணம் செய்து கொண்டு தனது சொந்த வாழ்க்கையினை பார்க்க தொடங்கினார். பின்னர் பிள்ளைகளை வளர்த்த பின்னர் மீண்டும் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்வாக இருப்பவர். இந்நிலையில், தனது 80ஸ் களின் தோழிகளுடன் சேர்ந்து தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்நிலையில் மும்பையில் தன்னுடைய தோழிகளான குஷ்பு மற்றும் பூனம் தில்லானை சந்தித்துள்ளார்.அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் அப்படியே இருக்கிங்க மேடம் என்று ரசிகர்கள் வர்ண்ணித்து கொட்டுகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..!

 

uma