80களில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீப்ரியாவின் மகளா இது.. இவ்வளவு அழகிய பொண்ணா வைரலாகும் புகைப்படம்!

Cinema News

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. முன்னணி நடிகர்களான கமல், ரஜினி படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து பல படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகளில் நடித்து வந்தார்.

மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீப்ரியா சினேகா என்ற மகளையும் நாகர்ஜுன் என்ற மகனையும் பெற்றனர். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஸ்ரீப்ரியா மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தினை இயக்கினார். அப்படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகள் சினேகாவை அறிமுகம் செய்தார்.

அம்மவைவிட அழகில் பட்டம் வென்றதுபோல் லண்டனில் வழக்கறிஞர் பட்டம் பெற்று பணியாற்றி வருகிறார். நடிக்க வருவீர்களா என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு எனக்கு பெரிய வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் இல்லை என்று கூறினார்.

தற்போது சினேகா சேதுபதியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.