7 வருடம் கழித்து குழந்தை! எனக்கு விவாகரத்து ஆகவில்லை? வதந்திக்கு முற்றிபுள்ளி வைத்த 42 வயது நடிகை பூமிகா!!

Cinema News

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. தெலுங்கு படங்களில் முன்னனி நடிகையாக இருந்து பின் கிடைக்கும் நேரத்தில் தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார் பூமிகா.

இதையடுத்து, பாஜ்பூரி, இந்தி, பஞ்சாப், மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். கடந்த 2007ல் தான் காதலித்து வந்த யோகா மாஸ்டரான பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்க கணவரின் விருப்பத்தோடு பல படங்களில் நடித்து வந்தார். இதனால் குழந்தை பெற்றெடுக்கவும் தள்ளி போட்டுள்ளார்கள் இருவரும்.

இதனைத்தொடர்ந்து இருவருக்கும் 2014ல் ஆண் குழ்ந்தையை பெற்றெடுத்தார். தற்போது சினிமாவில் நடித்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

சமீபகாலமாக பூமிகாவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று பல வதந்தி செய்திகளாக இணையத்தில் பரவியது. இதற்கு காரணம் சமீபகாலமாக பூமிகா தன் குழந்தை புகைப்படத்தையும் கணவர் புகைப்படத்தையும் போடாமல் சிங்கிள் ஆளாக இருந்துள்ள புகைப்படத்தைப் வெளியிட்டு வந்துள்ளார்.

இதனால், எனக்கு விவாகரத்து ஆகவில்லை என் கணவரும் நானும் என் குழ்ந்தையும் ஒன்றாக இருக்கிறோம் என்று புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.

மேலும் இன்று எனக்கு திருமண நாள் என்று, கணவருடன் சேர்ந்து திருமண நாளை கொண்டாடி எடுத்த கொண்டபுகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.