50 வயசிலும் மதுபாலா எப்படி இருக்காங்கன்னு பாருங்க !! பீச் பார்ட்டி மாடர்ன் டிரெஸ் என எப்படி வாழ்கிறார்ன்னு பாருங்க !!

Cinema News

ஹீரோக்கள் திரையுலகில் முப்பது, நாப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் ஹிரோயின்கள் அப்படி இல்லை. அவர்கள் சினிமாத்துறையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை தான் தாக்குபிடிக்கிறார்கள்.இன்னும் சிலர் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போகிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் ரஜினி, கமல், சத்யராஜ். பிரபு என பலரும் நடித்துவர..அப்படிச்சொல்ல இங்கே நடிகைகள் இல்லை. பத்து ஆண்டுகளைக் கடந்து நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் திருமனம் முடிந்ததும் தங்கள் உடல், அழகை மெயிண்டைன் செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். அப்படி மெயிண்டைன் செய்தவர்க நதியா, ஸ்ரீதேவி என சொற்பம் தான். அவர்களின் வரிசையில் மதுபாலாவும் ஒருவர்.

1992ல் மணிரத்தினம் இயக்கிய ரோஜாவில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தவர் இவர். தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேனிலும் ஹீரோயினாக நடித்தார். பிரபு, பிரசாந்த், பிரபுதேவா என அன்றைய கால முண்ணனி நடிகர்கள் பலரோடும் நடித்திருந்தார். இந்திப்படத்திலும் நடித்துள்ள மதுபாலா, கடந்த 1999ல் பழம்பெரும் நடிகை ஹேமமாலினியின் உறவினர் ஆனந்த ஷாவை கல்யாணம் செய்தார்.கடைசியாக இவர் தமிழில் வாயைமூடி பேசவும் திரைப்படத்தில் நடித்தார்.

இப்போது இவர்களுக்கு அமெயா, கையா என இரு குழந்தைகள் உள்ளனர். மூத்தவளுக்கு 18 வயது. இளையவளுக்கு 16 வயது. 50 வயதைக் கடந்திருக்கும் மதுபாலா கடற்கரையில் யங், எனர்ஜிட்டிக்காக இருக்கும் தன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்ப்பவர்கள் ஆத்தி…50 வயதிலும் இப்படியா? என அசந்துபோகின்றனர்.