13 வருடங்களுக்கு பிறகு காதல் படத்தின் ஜோடிகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? இதோ வைரல் புகைப்படம்..!

Cinema News

தமிழ் சினிமாவில் பல காதல் படங்களை சந்தித்துள்ளது. அதில் ஒன்றான காதல் படம் ஒரு தனி வரவேற்பை பெற்று இருந்தது ரசிகர்களிடையே. இந்நிலையில் அப்படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகையான பரத், சந்தியா அவர்கள் 13 வருடங்களுக்கு பிறகு தற்போது சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் கூறி இருப்பார்.  இப்படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல். நடிகர் பரத், நடிகை சந்தியா ஜோடியாக நடித்த இந்த படம் பெரிய வெற்றியை  தேடி தந்தது. 2004ல் ஆண்டில் மிகப்பெரிய வெற்றி படமாக இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக இப்படத்தில் வரும் பாடல்கள் வரிகளை மறைந்த நா.முத்துக்குமார் அவர்களால் எழுத்தப்பட்டது. இந்த பாடல் வரிகளை இன்றும் அனைவரின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பரத்திற்கும், சந்தியாவிற்கும்  இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தில் ஜோடியாக நடித்தனர். இதனையத்து தற்போது, இருவரும் 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர்.

இருவரும் ஒன்றாக எடுத்த செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

uma