தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி அவர்கள். நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார்.
இந்த படத்தினை தொடர்ந்து, அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். இதனையடுத்து, தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
நடிகை அஞ்சலிக்கு தற்போது 34 வயது ஆகிறது. இடையில், நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்யப் போவதாகவும் பேச்சு அடிப்பட்டது. ஆனால் இருவருக்கும் கருத்து வே றுபாடு ஏற்பட்டதால் பி ரிந்து விட்டதாகவும் கூறினார்கள்.
இந்நிலையில், நடிகை அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் சீக்கிரத்தில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளது.
மாப்பிள்ளை பற்றி இரண்டு விதமான செய்திகள் வருகிறது.
அதில் ஒன்று தெலுங்கு நடிகராக இருக்கலாம் அல்லது வீட்டில் பார்க்கும் தொழிலதிபர் தான் மாப்பிள்ளையாக இருக்கலாமாம். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.