ஹாலிவுட் நடிகர்களையும் மிஞ்சும் வகையில் போட்டோஷூட் நடத்திய கருணாஸ் மற்றும் அவரது மனைவி !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

Cinema News

லொடுக்கு பாண்டி’யாக இயக்குனர் பாலாவின் ‘நந்தா’வில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ்.

நடிகர் கருணாஸும் அவர் மனைவி கிரேஸும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கிரேஸ் கருணாஸ், ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள, சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய் உட்பட பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

இப்போது எம்.எல்.ஏவாக இருக்கும் அவர், அதிகமான படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், இந்த தம்பதியர் போட்டோஷூட் நடத்தி அசத்தியுள்ளனர்.

கறுப்பு நிற கோட் சூட்டில் நீண்ட முடி மற்றும் தாடியுடன் கருணாஸ் தோற்றமளிக்க, மனைவியும் அதே கருப்பு நிற உடையிலான அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.