விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன்! உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா! காரணமா இதுதானா?

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்து தெறித்து ஓடிய கமல்ஹாசன் மகள் சுருதி காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ’மக்கள் செல்வன்’ என்று செல்லமாக அழைக்கும் நடிகர் விஜய் சேதுபதி நடிகராகவும், வில்லனாகவும் அனைத்து கதாப்பத்திரத்திலும் கலக்கி வருபவர் தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவில் முன்னேறியதினால் அனைத்து மக்களையும் மிகவும் மதிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இதன் காரணமாக யார் தம்மீது பாசமாக இருந்தாலும் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் குணம் அவருக்கு.

இந்த குணத்தினால் தற்போது கமல் ஹாசனின் மகளுமான சுருதி ஹாசன் விஜய் சேதுபதி உடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்துள்ளார். லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் விஜய்சேதுபதியுடனான ரொமான்ஸ் காட்சிகளின்  சுருதி ஹாசன் உடன் படப்பிடிப்பு நடந்து வருகிறார். இதற்கிடையில், விஜய் சேதுபதியை பார்க்க வந்த ரசிகர்களை  கட்டியணைத்து முத்த கொடுத்து நெருக்கமாக பேசியுள்ளார் இதனை பார்த்த சுருதி மிகவும் கடுப்பாகியுள்ளார்.

நான் விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். காரணம் கேட்கையில், இந்த கொரானா காலத்தில் இப்படி தனிமனித இடைவெளிவிட்டு படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்ற கட்டுப்பாட்டினை மீறி விஜய் சேதுபதி நடந்து கொண்டது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரால் எனக்கும் கொரோனா வரும் பயத்தில் இவருடன் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இயக்குனர்கள் சுருதியை சமாதானப்படுத்தி வருகிறார்கள். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

uma