விஜய்யுடன் முதன் முறையாக இணையும் ஜோடி..! விஜய்யின் 65வது படத்தின் நாயகியும் இவர்தான்? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

Cinema News

விஜய் பற்றி சமூக வலைத்தளத்தில் மாஸ்டர் படத்தின் தகவல்களை விட தற்போது விஜய்யின் 65வது படத்தின் தகவல்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் பற்றிய விவரங்கள் தெரிந்த நிலையின் படத்தின் நாயகி யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

விஜய்யின் 65வது படம் பற்றிய மிகப்பெரிய அறிவிப்புடன் சன் பிக்சர்ஸ் விஜய்யின் 65வது படம் நெல்சன் இயக்குகிறார் என அறிவித்தனர். படத்திற்கு இசை அனிருத் மற்றபடி படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இணையத்தில் தளபதியுடன் இவர் தான் ஜோடி என்று பல வதந்திகள் உலா வருகிறது. அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளத்தில் அதாவது படத்தின் நாயகியாக பூஜா ஹெட்ச் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பூஜா அவர்கள் இணைந்தாலி அவர் விஜய்யுடன் முதன் முறையாக இணைவார் என்பது குறிப்பிடத்த்தக்கது.

ஆனால் இது குறித்து படக்குழுவினர் எந்தவித தகவல்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்கலாம் எது உண்மை என்று!

uma