விஜய்யுடன் நடித்த குழந்தை நட்சத்திரமா இது? இப்போ எப்படியிருக்கிறார் பாருங்க!!

Cinema News

சென்னையில் பிறந்த ரவீனா தாஹா, கதை சொல்லப் போறோம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதையடுத்து விஜய்யின் ஜில்லா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், இவர் வந்து சென்ற காட்சிகளுக்கு பின்னர் தான் விஜய்யே கெட்டவர்களை சுளுக்கெடுக்கத் தொடங்குவார்.

தொடர்ந்து விஷ்ணு விஷாலின் ராட்சசன், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா தொடரில் நடித்து வருகிறார்.

இதுதவிர நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்துக் கொண்டு தன் திறமையை காண்பித்து வருகிறாராம்.

கால்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்ட ரவீனாவுக்கு செல்லப் பிராணிகளை வளர்ப்பதென்றால் அதீத பிரியமாம்.

அதுமட்டுமின்றி தென்னிந்திய மற்றும் ஸ்பானிஷ் உணவுகளையும் விரும்பி சாப்பிடுவாராம்.

புகைப்படம்