விசேஷத்திற்கு சென்ற சரத்குமார் குடும்பத்திற்கு கொரோனா தொற்று! உறுதி செய்த ராதிகா!

Cinema News

குடும்பத்துடன் விசேஷத்திற்கு சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ராதிகா சரத்குமார் அவர்கள் உறுதி செய்தார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சரத்குமார் அவரது குடும்பத்துடன் ராதிகாவின் மகளுக்கு காது குத்தும் நிகழ்விற்கு சென்ற போது சரத்குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. அறிகுறி ஏதும் இன்றி இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  இது குறித்து, ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிடுவது என்னவென்றால், ஹைதராபாத்தில் இன்று சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும்  அறிகுறியற்ற கொவிட் பாதிப்புகள் மற்றும்  மருத்துவர்களின் பாதுகாப்பில் நல்ல நிலைமையில் இருக்கிறார் என்றும் பதிவு செய்தார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

uma