முழுக்க முழுக்க தமிழச்சியாக மாறும் நயன்தாரா.! மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள வரலாற்று திரைப்படத்தில் வேலுநாச்சியாராக நயன்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Cinema News

தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இதுவரைக்கும் நடித்திடாத வரலாற்று திரைப்படத்தில் நடிக்க போகிறார். அதிலும் குறிப்பாக மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள வரலாற்று திரைப்படத்தில் வேலுநாச்சியாராக நடிக்கிறார் நம்ம நயன்தாரா.

தென்னிந்தியாவில் பல முன்னணி நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டம் வைத்துள்ளவர் நயன்தாரா அவர்கள். இந்நிலையில், நடிகர்களிக்கு இணையாக வரலாற்று படத்தில் நடிக்க திட்டம் இட்டு இருந்தார்.

இந்நிலையில், நயந்தாரா நடிப்பில் தீபாவளி அன்று இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி பார்வையாளர்களை குவித்தது.

அதுமட்டுமின்றி தமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் நம்ம நயன். இந்நிலையில், அதனை முடித்து விட்டு காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி முதல் தமிழ் பெண்ணான வீர மங்கை வேலுநாச்சியாரின் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்த படத்தை இயக்குனர் சுசி கணேசன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அம்மனாக கலக்கிய நயந்தாரா வேலுநாச்சியா எப்படி நடிக்க போகிறார் என்பதை பார்க்கலாம்.

uma