முகத்தில் வால் உடைய அதிசய நாய்க்குட்டி.. இணையத்தை கலக்கும்வீடியோ மற்றும் புகைப்படங்கள் !!

Viral Videos

அமெரிக்காவில் முகத்தில் வால் உடைய நாய்குட்டியின் புகைப்படம் சமூக வலைதலங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகரத்தில் தெருவில் முகத்தில் வால் உடைய நாய்க்குட்டியை, அப்பகுதியில் உள்ள மாக் என்ற தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பு மீட்டுள்ளது.

தற்போது, குறித்த நாய்க்குட்டி, மாக் அமைப்பின் பராமரிப்பில் தான் வளர்ந்து வருகிறது.

இதுகுறித்து, இந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டெபான் கூறுகையில், ‘7 ஆண்டுகளாக இந்த அமைப்பு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறது.

குறிப்பாக ஐந்து கால்கள் உடைய நாய்கள், பிறப்பிலேயே உடலுறுப்பு வளர்ச்சி இல்லாத பல நாய்களை கவனத்தில் எடுத்து பராமரித்துள்ளோம். ஆனால் இம்மாதிரி முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை நான் பார்த்ததே இல்லை.

கான்சாஸ் நகர தெருவில் சென்று கொண்டிருந்த போது தெருவோரத்தில் பனியில் இந்த குட்டி உறைந்து கிடந்தது. உடனே அதை மீட்டேன். அதற்கு நார்வால் என பெயரிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

நார்வால் என்பது ஆர்க்டிக் கடலில் வாழும் ஒருவகை திமிங்கலம். இந்த திமிங்கலத்தின் தலையில் முன்புறம் தந்தம் போன்ற நீளமான கூர்மையான உறுப்பு இருக்கும். மீட்கப்பட்ட நார்வால் நாய்க்குட்டி கால்நடை மருத்துவரிடம் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்து பார்த்ததில், இந்த வால் இருப்பதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. மற்ற நாய்களை போலவே நார்வால் சாதாரணமாகவே இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்த புகைப்படங்களை குறித்த தன்னார்வ நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த நாய்க்குட்டியின் புகைப்படங்கள் யூனிகார்ன் பப்பி என இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இது குறித்தபுகைப்படம் தான் இன்று இணையத்தைவைரலாகி அனைவராயியும் ஆச்சரியப்பட வைத்துக்கொண்டிருக்கிறது  வீடியோ பதிவு ஏதும் இருந்தால் போடுங்க என்று இணையவாசிகள் கேட்டு வருகிறார்கள்.