மீரா மிதுன் போட்ட மோசமான ட்வீட்!இதற்கான அர்த்தத்தை ஜோதிகா கிட்ட கேட்டு சொல்லுங்க சூர்யா…!ஆத்திரத்தில் ரசிகர்கள்!!

Cinema News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிவந்த மீரா மிதுன் தற்போது பயங்கர சர்ச்சையினை ஏற்படுத்தி வருகின்றார்.

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா, தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.

ஒரு சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன், சூர்யா நடிப்பின் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதற்கு காரணம் சூர்யா தான் என்று குற்றம் சாட்டி இருந்தார் மீரா மிதுன். இதனால் அடிக்கடி சூர்யா குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வகையில்சூர்யாவின் ரசிகர் ஒருவர், மீரா மிதுனை மோசமாக திட்டி தீர்த்துள்ளார்.

அதற்கு மோசமாக அளித்த மீரா மிதுன், சூர்யா உங்கள் மனைவி ஜோதிகாவிடம் இதற்கான அர்த்தத்தை கேட்டு சொல்ல முடியுமா? என்றும் ராஜா அவர்களே நீங்களும் இதை பற்றி சூரியாவிடம் கேட்டு சொல்ல முடியுமா என்று கூறியிருப்பது தற்போது மீண்டும் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.