மீண்டும் வெள்ளித்திரைக்கு நடிக்க வரும் வனிதா..! யார் இயக்கத்தில் தெரியுமா? கொண்டாடத்தில் மது பாட்டிலுடன் போட்டோக்கு போஸ் கொடுத்த வனிதா..!

Cinema News

வனிதா என்றதும் நமக்கு எல்லாம் ஞாபகம் வருவது அவரது பேச்சு தான் அதுமட்டுமின்றி சர்ச்சைகளின் ராணி என்று கூட கூறலாம். சமீபத்தில் இவருக்கும் பீட்டருக்கும் பிரேக்கப் ஆனது இணைய வாசிகளிடையே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.

இந்நிலையில், வெள்ளித்திரையில் நடித்த வனிதா தற்போது மீண்டு நடிக்க இருகிறார். இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் நடிகை வனிதா அவர்கள் தற்போது இந்த செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமாகிய வனிதா விஜயகுமார் தற்போது 25 வருடம் கழித்து மீண்டும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பின்னர் ராஜ்கிரணின் ’மாணிக்கம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த வனிதா. சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகினார் நடிகை வனிதா.

பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றார். இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வின்னர் ஆன வனிதாவுக்கு தொடர்ந்து தொலைக்காட்சியில் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தற்போது மீண்டும் கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பாபி சிம்ஹா நடித்த ’பாம்பு சட்டை’ என்ற படத்தை இயக்கிய ஆதம்தாஸன் என்பவர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வனிதா நாயகியாகவும், முக்கிய வேடத்தில் கருணாகரனும் நடிக்கின்றனர்.

இந்த பட வாய்ப்பிற்காக வனிதா தனது உடல் எடையை குறைத்து ஹேர்ஸ்டைலையும் மாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி கையில் மது பாட்டலுடன் போட்டோக்கும் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

uma