மாஸ்டர் படம் 2020ல் ரிலீஸ் இல்லை என்பதால் விஜய்யின் அதிரடி முடிவு!!ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்!!

Cinema News

இளைய தளபதி விஜய் எப்போதும் தனது ரசிகர்களை ஏமாற்றவே மாட்டார். அவர்களை கொண்டாட வைக்கும் வகையில் வருடத்திற்கு வருடம் ஒரு படம் என கொடுத்துவிடுவார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படங்களும் எடுத்துக் கொள்வார். இந்த வருடம் மாஸ்டர் படம் வெளிவர வேண்டியது, ஆனால் கொரோனா தடுத்துவிட்டது.

இதனால் 2021ல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் விஜய். அது என்னவென்றால் மாஸ்டர் படத்தை 2021 பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழுவிடம் பேசியுள்ளாராம்.

அதுபோக தனது 65வது படக்குழுவினரிடம் ஸ்கிரிப்டை உடனே தயார் செய்ய சொல்லியுள்ளாராம். அதை அடுத்தடுத்து நடித்துக் கொடுத்து 2021ல்லேயே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

இது மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்.