மறைந்த அண்ணனின் வாரிசுக்காக ரூ.10 லட்சத்தில் வெள்ளி தொட்டில்… அசத்தும் தம்பி நடிகர்…! அசந்துபோன ரசிகர்கள் !!

Cinema News

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மேக்னா ராஜுக்கு அண்மையில் வளைகாப்பு நடத்தப்பட்டது.

பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி திடீரென ஏற்பட்ட மா ரடைப்பு காரணமாக கா ல மானார்.

அப்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்னும் சில நாட்கள் கழித்து தான் அப்பாவாக உள்ள நல்ல செய்தியை வெளியில் கூறலாம் என காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உ யிரிழந்தார்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மேக்னா ராஜுக்கு அண்மையில் வளைகாப்பு நடத்தப்பட்டது.

அப்பொழுது அவர் தன் கணவர் சிரஞ்சீவியின் ஆளுயர கட்அவுட்டை தனக்கு அருகில் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அண்ணன் சிரஞ்சீவி சார்ஜா மீது தம்பி துருவ் சார்ஜா உயிரையே வைத்திருந்தார். அண்ணனின் மரண செய்தி கேட்டு மிகவும் மனமுடைந்து போனார்.

இந்நிலையில் தனது அண்ணனின் குழந்தைக்காக ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி தொட்டிலை வாங்கி அண்ணி மேக்னாவிற்கு பரிசளித்துள்ளார்.