மருமகள் சமந்தாவிற்கு டஃப் கொடுக்கும் நடிகை அமலா..! 50 வயதிலும் வெறித்தனமான உடற்பயிற்சி செய்யும் அமலாவின் புகைப்படம் இதோ!

Cinema News

80ஸ்களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா அவர்கள். இவர் சினிமா துறைக்கு முதன் முதலாக  மைதிலி என்னை காதலி படத்தில் வாய்ப்பு பெற்று அறிமுகம் ஆனார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மெல்ல திறந்த கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, உன்னை ஒன்று கேட்பேன், ஒரு இனிய உதயம், ஐந்து படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார். முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1992 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்த இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்.

53 வயதாகும் அமலா. தன்னுடைய உடலை உடல் பயிற்சியின் மூலம் மிகவும்  ஃபிட்டாக வைத்துக்கொள்கிறார். இதனால், கடுமையான உடற்பயிற்சிகளை செய்தும் தன்னுடைய உடலை வலுப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மருமகள் சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உடற்பயிர்சியின் முக்கியத்துவத்தை கூறும் விதமாக சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இதோ அவரின் புகைப்படம்..!!

uma