பெண்குழந்தை பெற்று வீட்டுக்கு வந்த மருமகளை-எப்படி வரவேற்கிறாங்க பாருங்க… மனதை உருகவைக்கும் வீடியோ

Tamil News

மாமியார் உடைத்தால் மண் குடம்..மருமகள் உடைத்தால் பொன்குடம் என கிராமத்துப் பக்கம் பழமொழி சொல்வார்கள். காரணம், புகுந்த வீட்டில் மருமகள்கள் அவ்வளவு சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள்.

அதேபோல் திருமணம் முடிந்ததுமே மருமகள்களிடம் விசேசம் உண்டா? என சொந்தங்கள் கேட்கத் துவங்கிவிடுவார்கள். அதிலும் பெண் குழந்தை பிறந்துவிட்டால், ச்சே…ஆம்பளை பிள்ளை பிறக்கலியே என மருமகள்களின் மீது சங்கடப்பட்டுக் கொள்வோரும் உண்டு. இப்படியான சூழலுக்கு மத்தியில் தான் இங்கே பெண் குழந்தை பெற்று, முதன் முதலாக பேத்தியை தான் புகுந்த வீட்டுக்கு எடுத்துவந்த பெண்ணை வேற லெவலில் வரவேற்று உள்ளார் ஒரு மாமியார்.

மருமகள் வரும் வழியெல்லாம் பூ தூவி, அவர் காலையும், பேத்தி காலையும் அபிசேக நீரால் கழுவி, ஆரத்தி எடுத்து பேத்திக்கும், மருமகளுக்கும் பொட்டுவைத்து வீட்டுப்படியில் பேத்தியின் கால் தடம் பதித்து செல்வது போல் வேற லெவலில் வரவேற்கின்றனர். நீங்களே பாருங்களேன்.