புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Cinema News

20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தவசி மருத்துவமனையில் புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கம்பீரமான தோற்றம்  கரகரத்த குரல் பெரிய மீசை, தொங்கும் வெண்தாடி இதுதான் நடிகர் தவசி. இவர் தேனி மாவட்டம் கோணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர். ‘கிழக்கு சீமையிலே’ தொடங்கி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தவசி திண்டுக்கல்லில் உள்ள தனது மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு புற்று நோய் தோற்று இருந்தால் இவரின் உடல் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் அவருக்கு உதவி செய்ய முன்னுக்கு வந்தனர். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

uma