பீட்டர் பாலை பிரிந்தது உண்மைதான் !! விரைவில் விவாகரத்தா ?? உருக்கமான பதிவை வெளியிட்ட வனிதா விஜயகுமார் !!

big boss Cinema News

சில மாதங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமணம் குறித்து பல சர் ச்சை கள் எழுந்து வந்தன. வனிதா விஜயகுமார் பீட்டரை 3வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இதுதொடர்பாக பீட்டர்பாலின் மனைவி எலிசபெத் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேநேரம் எனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும் பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதற்கு அடுத்து வனிதா விஜயகுமார் பீட்டர்பாலின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் வெடித்தன.

அப்போது தன்னை விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்றோருக்கு வனிதா மோசமான முறையில் பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வனித விஜயகுமர்.

அதில் ” நான் எதையும் மறைக்கவும் இல்லை, நான் என் குழந்தைகளுக்கும் வேலைக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் பிரச்சினையை திடமாக நின்று எதிர்கொண்டு வருகிறேன், என் வாழ்க்கையில் பிரச்சினை ஒன்றும் புதியது அல்ல, வாழ்க்கை ஒரு பாடம் அதில் நான் கற்று கொண்டிருக்கிறேன், நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால் பொய் செய்திகளை படித்துவிட்டு ஏதாவது ஒரு கதையை எழுதி கொண்டு இருக்காதீர்கள், நான் எதையும் தவறாக செய்துவிடவில்லை , அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அன்பு செலுத்தினேன், தற்போது என் கனவுகளும் நம்பிக்கைகளும் நொறுங்கிய நிலையில் நிற்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன். நான் யாரிடமும் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி, அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்க வில்லை எடுத்து வருகிறேன், இறுதியாக நான் எதையும் இழக்கவில்லை.

தனது அறிக்கையில் இவ்வாறு அறிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். இதுதொடர்பாக கோலிவுட்டில் வனிதா விஜயகுமார் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.