பிறந்த நாள் அன்று ஸ்ருதிஹாசனுக்கு அடித்த அதிஷ்டம்..! மாஸ் ஹீரோக்கு ஜோடியாகும் கமல் மகள்..! பிறந்த நாள் அன்று கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

Cinema News

கமல் மகளான ஸ்ருதிஹாஸன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர்

பிறந்த நாளான இன்று அவருக்கு ட்ரீட் ஆக மாஸ் நடிகர் ஒருவரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை ஸ்ருதிஹாஸன் பெற்றுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறார்கள்.

இந்திய சினிமாவில் ‘பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் உலக புகழ் பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் அடுத்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ’சலார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் எனப்வர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மேலும் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவிருப்பதை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு சுருதிஹாசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் பிறந்த நாளில் அவருக்கு கிடைத்த ட்ரீட் என்றும் கூறப்படுகிறது.

இதோ அந்த பதிவு..!

 

View this post on Instagram

 

A post shared by Prabhas (@actorprabhas)

uma