பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே! லேடி சூப்பர் ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்! அப்படி என்ன சர்ப்ரைஸ்?

Cinema News

லேடி சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் காதல் விக்னேஷ் சிவன். அப்படி என்ன சர்ப்ரைஸ் என்பதை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்தநாள். நயன்தாரா பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டு இருகிறார்கள். இந்நிலையில், காதலன் விக்னேஷ் சிவன் காதலி நயனுக்காக ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அந்த சர்ப்ரைஸ் என்னவென்றால் நயந்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் ”ரேஞ்சர்” படத்தில் புகைப்படத்தினை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

அதுமட்டுமின்றி நயன்தாராவின் புகைப்படத்தை பகிர்ந்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கமே என்று வாழ்த்துகளும் கூறியுள்ளார். தங்கமே! என்ற வார்த்தை ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Photos 001

Photos 002

uma