பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவலைக்கிடம்! பேரதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்!

Cinema News

விஜய் டிவி மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் கவுசல்யா செந்தாமரையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் மிகவும் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

பிரபல நடிகையான கவுசல்யா செந்தாமரையின் வயது சுமார் 74 இருக்கும். இந்நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பு ஆகும் இந்த சீரியல் மிகவும் பிரபலமானது.  இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கவுசல்யா செந்தமாரை திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். சிகிச்சைக்கு பின்னரும் உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் பாண்டியன் ஸ்டோர் நடிகை, நடிகர் மற்றும் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

 

 

 

uma