பிரபல நடிகை சாய் பல்லவியை அவருக்கு ஹீரோயினா போடுவாங்கன்னு பாத்தா.. இப்படி டுபுக்குனு ஆகிடுச்சே..!உச் கொட்டும் ரசிகர்கள்!!

Cinema News

நடிகர் அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த “வேதாளம்” படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான் சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் மண்ணை கவ்வியது. சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்கையை பிரதிபலிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் படம் முழுதும் சிரஞ்சீவியின் இமேஜை பில்டப் செய்வது போன்ற காட்சிகள் நிரம்பி வழிந்ததால் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இதனால், வேறு மொழியில் ஹிட் அடித்த ஒரு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டு “வேதாளம்” படத்தை தேர்வு செய்துள்ளார் சிரஞ்சீவி. இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்க தமிழில் தயாரித்த ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம்சரணும் தயாரிக்க உள்ளார்.

இப்போது அந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ரவுடி வேதாளம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி மொட்டை அடித்து தனது கெட் அப்பை மாற்றியுள்ளார்.

இந்நிலையில், வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது அதற்கான விடைக் கிடைத்துள்ளது.

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவிதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தமிழ்ப் பதிப்பில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி சம்மதித்துள்ளாராம்.

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவிதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆனால் ரசிகர்களோ சாய் பல்லவியை சிரஞ்சீவிக்கு நாயகியாக போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் தங்கையாக நடிக்க வைத்துவிட்டார்களே என்று உச் கொட்டுகிறார்களாம். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.