பிரபல சின்னத்திரை நடிகருக்கு திடீர் திருமணம்… ! அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்..!! தீயாய் பரவும் புகைப்படங்கள் இதோ!

Cinema News

பிரபல சின்னத்திரை நடிகர் ராகுலிற்கு திடீர் திருமணம் நடைபெற்றது. இவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் மாடலிங் துறையிலிருந்து சினிமாத்துறையில் 2013ம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். பல முயற்சிக்கு பிறகு தமிழில் பிரபல ரிவியில் ‘நந்தினி’ சீரியலில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார் ராகுல்.

நந்தினி  சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராகுல், அதைத்தொடர்ந்து பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘சாக்லேட்’ தொடரிலும் நாயகனாக நடித்தார்.

தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் யுவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றார். சீரியல் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் ராகுல் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில்மாடலிங் துறையைச் சேர்ந்த லக்‌ஷ்மி நாயரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்த ராகுலுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

இவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனால் அவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

uma