பிக் பாஸில் கர்ஜிக்கும் குரல் இவருடையது தான்! பார்பதற்கு அமுல் பேபி மாதிரி இருக்கும் இவரா இது? முதன் முறையாக புகைப்படத்துடன் வெளியான ரகசியம்..!

Uncategorized

விஜய் டிவியில் ஒளிப்பரப்பு ஆகும் பிக் பாஸில் கர்ஜிக்கும் குரலை அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது. வேறும் குரலை மட்டும் கேட்கும் மக்களுக்கு தற்போது அவரது புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகம் செய்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பு ஆகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக வருகிறது.  இதில் பிக் பாஸ் சீசன் 1,2,3 என மூன்று சீசனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது 4 வது சீசன் நடைப்பெற்று வருகிறது.

பிக் பாஸ் பார்க்கும் அனைவருக்கும் தெரியும் அதில் ஒலிக்கு குரல் தான். இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியாக இருந்த விஷயம், பிக் பாஸின் குரல். ஆம் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் பிக் பாஸ் துவங்கிய போது, தமிழ் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர், சீரியல் நடிகர் அமித் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுத்தார் அமித். நான் கன்னடத்தில் ஒரு முறை பிக் பாஸிற்கு குரல் கொடுத்துள்ளேன். ஆனால் தமிழில் இதுவரை நான் குரல் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தற்போது பிக் பாஸாக குரல் கொடுப்பது யார் என்று முதல் முறையாக தெரியவந்துள்ளது. இவரின் பெயர் சச்சிதானந்தம். இவர் பாலிவுட் நடிகர். மேலும், பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமின்றி இவர் குரல் வல்லுனராக இருக்கிறார்.

இதனால் தான் இவருக்கு பிக்பாஸில் குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதோ அவரின் புகைப்படங்கள்..

uma