பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா –கசிந்த தகவல் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

big boss

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வோரு வாரமும் ஒவ்வோரு நபர் வெளியேறி கொண்டு இருக்கும் வேளையில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பு ஆகும் பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை ஒளிப்பரப்பு ஆனா முதல் புரொமோவில் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது காட்டப்பட்டது.

அதன் பின்னர் வெளியான புரொமோவில் இந்த வாரம் தலைவருக்கான போட்டி நடக்க ஆரி தேர்வாகிறார். வார இறுதி நாட்கள் வந்துவிட்டது. இந்த முறை ஆரி, கேப்ரியலா, ஷிவானி, ஆஜீத், அனிதா ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனார்கள்.

இந்நிலையில், மக்கள் ஓட்டிங் விவரங்களை வைத்து பார்த்தால் அனிதா வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.

uma