பிக்பாஸ் நடிகர் சக்தி தனது மகனுடன் ஆரவ் வீட்டு விஷேசத்தில் கலந்து கொண்டார் ! இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம்!!

Cinema News

பிக் பாஸ் ஆரவ் திருமணத்தில் கலந்து கொண்ட சக்தி மற்றும் அவரின் மகன் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பி.வாசுவின் மகன் சக்தி வாசுதேவன்.

தனது தந்தை இயக்கிய சின்னத்தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்த சக்தி, தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகர் சக்தி காயத்ரியின் நண்பராக அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்ததால் பார்வையாளர்களிடையே விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு படங்கள் எதுவும் நடிக்காமலிருக்கும் நடிகர் சக்தி அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் ஆரவ் திருமணத்திற்கு மகனுடன் கலந்து கொண்டுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகனா என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.